8:45 am - Tuesday May 23, 2017

எப்பொழுது?

yeppoluthuஎப்பொழுது நான் காண்பேன்?

பிறர் புண்படாமல்
பேசும் தமிழை
எப்பொழுது நான் காண்பேன்?

பிறர் பசிக்கு
அழும் கண்களை
எப்பொழுது நான் காண்பேன்?

செத்த பிராணியை
அடக்கம் செய்யும் செயலை
எப்பொழுது நான் காண்பேன்?

சொத்துக்காக அடித்து கொள்ளாத
பலமான உறவை
எப்பொழுது நான் காண்பேன்?

சீர்கேட்டில் அழியாத
இள இரத்த இளைஞனை
எப்பொழுது நான் காண்பேன்?
சிரித்து கொண்டே வாழும்
முதியோரின் முகத்தை
எப்பொழுது நான் காண்பேன்?

மனைவியை ஏமாற்றாத
கண்ணியமான கணவனை
எப்பொழுது நான் காண்பேன்?

மானத்தை மறக்காத
மானசீக பெண்களை
எப்பொழுது நான் காண்பேன்?

பெற்றோரை எதிர்த்து
பேசாப் பிள்ளையை
எப்பொழுது நான் காண்பேன்?

பொய் பேசாத
இனிப்பான உதடுகளை
எப்பொழுது நான் காண்பேன்?

எப்பொழுது?
எப்பொழுது?
எப்பொழுது?
இறைவா..
உண்மையில்
நீ படைத்த மனிதனை
நான் காண்பது எப்பொழுது?

இப்பொழுது
இருப்பதெல்லாம்
போலி தானே…???

ஓவியா ஓமாபதி
-தைப்பிங்-
பேசும் கவிதைகள்-

Filed in: தமிழ் அரங்கம்

No comments yet.

Leave a Reply