6:27 pm - Thursday June 22, 2017

தாய்

amma-tamil-kavithaipngதெரியாத வயதில்
காதல் செய்’தாய்’
தாழியைக் கழுத்தில்
ஏந்த மறந்’தாய்’

காம நோயில்
விழுந்து கிடந்’தாய்’
பத்து மாதம்
என்னைச் சுமந்’தாய்’
அடுத்த மாதம்
சுமையாய் நினைத்’தாய்’

பசியில் அழுதேன்
பால் கொடுக்க மறுத்’தாய்’
பசுவைத் தாயாய்
நினைக்கச் செய்’தாய்’
பசுவிற்கு மனமுண்டு
புரிய வைத்’தாய்’

அப்பாவைக் கேட்டால்
மூடி மறைத்’தாய்’
அப்பாவி பிள்ளை
வாழ்வைத் தொலைத்’தாய்’

உனக்கொரு அன்பு கணவரைத்
தேடி பிடித்’தாய்’
எனக்கொரு அன்பு இல்லத்தைக்
காட்டி கொடுத்’தாய்’

’தாய்’ இருப்பாள்
என்றிருந்தேன்
அநா’தையாய்’ இருப்பேன்
என்றறியாமல்.. !!

ஓவியா ஓமாபதி
-தைப்பிங்-
பேசும் கவிதைகள்-

Filed in: தமிழ் அரங்கம்

One Response to “தாய்”

  1. September 23, 2014 at 2:24 am #

    அன்புடையீர் வணக்கம்.

    உங்கள் கவிதையினை படித்தேன். உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எந்த ஒரு தாயும் எந்த சூழ்நிலையிலும் தன் பிள்ளைகளின் விமர்சனத்திற்கு ஆளாகக் கூடாது.

    அந்த சூழலில் அவரவருக்குத் தெரிந்த, மற்றும் பெற்ற அனுபவத்தில் மட்டுமே தான் இருக்கும் மனோபாவத்தை பொருத்து முடிவெடுக்கின்றார். அந்த சூழலை நாம் உணரா பருவத்தில் நடந்தவற்றிற்கு பெற்ற தாயை குறை கூறுவது நியாயமல்ல என்பது என் தாழ்மையான கருத்து. கவிதை கற்பனையாக இருந்தாலும் இது சரியல்ல என்று எண்ணுகின்றேன்.

    நன்றி.

Leave a Reply