12:37 am - Monday May 1, 2017

கல்லல்ல கடவுள்!

oviyaகாதலை மட்டும்
கண்ணுக்குக் காட்டும்
காதலி கடவுளாகிறாள்..

கடவுள் வடிவில்
வாழும் தாய்
கல்லாகிறாள்..

காதலி முறைத்துக் கொண்டால்
காதலன் கொஞ்சி பேசுகிறான்.
காதலன் முறைத்துக் கொண்டால்
காதலி கெஞ்சி பேசுகிறாள்..
பிள்ளை முறைத்துக் கொண்டால்
தாயோ நஞ்சி போகிறாள்.

காதலி உண்ணவில்லை
அரைநாளாய் ஆலோசனை
அலைபேசியில் அங்கே..
அம்மா உண்ணவில்லை..
அரைநொடி கூட அலறவில்லை
ஆண்மகன் இங்கே!

அம்மாவின் அறிவுரை
கசாயம் போல கசக்கும்..
காதலியின் அரட்டை
அமிர்தம் போல இனிக்கும்..
நோய் தோன்றும் இனிப்பினால்
நோய் தீரும் கசப்பினால்…!

பிறந்தாய் அன்று
தாயின் உதிரம்
உன் மேனியெங்கும்
சிவப்பாக..
வளர்ந்தாய் இன்று
காதலி நாமம்
உன் மேனியெங்கும்
பச்சையாக..

ஈன்றவள் மனதைக் கிழித்து விட்டு
காதலி மனதில் மருந்திடுகின்றாய்..!
ஈன்றவள் சபிக்கவில்லை..
ஈசன் உன்னை விடுவதில்லை
மதியில்லா மனிதனின் இயல்பு…
கடவுளை உணவர்வதில்லை..
கல்லை விடுவதில்லை..!

ஓவியா ஓமாபதி
-தைப்பிங்-
பேசும் கவிதைகள்-

Filed in: தமிழ் அரங்கம்

No comments yet.

Leave a Reply