6:16 pm - Wednesday July 23, 2014

ஆஸ்ட்ரோ வானவில்லில் உள்ளூர் நாடகங்கள் வாரநாட்களில் இரவு 9.00 மணிக்கு

கடந்த ஆண்டில் ஆஸ்ட்ரோ வானவில்லில் உள்ளூர் நாடகப் பயணம் ஒன்று மிகச் சிறப்பாக ஒளியேறியது. மீண்டும் இதன் இரண்டாவது பயணம் உங்களைக் கூடிய விரைவில் சந்திக்கவருகிறது. இவ்வாண்டில் பல உள்ளூர் நிறுவனங்கள் தங்கள் நாடகத்தைத் தயாரித்து வழங்கியிருந்தனர். அவற்றில் சிறப்பான கருவைக் கொண்ட பன்னிரண்டு நிறுவனங்களுக்கு நாடகத்தை தயாரித்து வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டில் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் இரண்டுப் பாகங்களைத் தொகுத்து வழங்கினர்.

இவ்வாண்டில் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் ஐந்து பாகங்கள் தயாரித்து வழங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்பணியை சிறப்பாக செய்து, அருமையான படைப்புகளை உருவாக்கிய நம் உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆஸ்ட்ரோ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அந்த பன்னிரண்டு படைப்புகள் யாவும் செப்டம்பர் 17 தொடங்கி ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 9.00 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில்லில் ஒளியேறவுள்ளது. அவை முறையே:

செப்டம்பர் 17-21 : திருப்பம்
செப்டம்பர் 24-28 : அவள் என்னைக் கேட்டாள்
அக்டோபர் 1-5 : வல்லமை தாராயோ
அக்டோபர் 8-12 : அப்பா செல்லம் ஐஸ்வர்யா
அக்டோபர் 15-19 : வாழ்க்கை வாழ்வதற்கே
அக்டோபர் 22-26 : பொம்மைகள்
அக்டோபர் 29- நவம்பர் 2: மர்ம வாசல்
நவம்பர் 5-9 : ஹரிபிரியா
நவம்பர் 12-16 : ஜெராண்டுட் நினைவுகள்
நவம்பர் 19-23 : அஞ்சலி
நவம்பர் 26-30 : அம்மாவின் வார்த்தைகள்
டிசம்பர் 3-7 : பணம்

மாறுப்பட்ட கதையம்சங்கள் மற்றும் கருப் பொருளைக் கொண்டிருக்கும் இந்த நாடகங்கள் உங்கள் பொழுதை அலங்கரிக்கவருகின்றது. இந்நாடகங்களில் நடித்திருக்கும் நம் உள்ளூர் கலைஞர்கள் பலர் தங்கள் நடிப்புத் திறமைகளை அழகாகவே வெளிக்காட்டியுள்ளனர். இயங்குனரின் இயல்பான நடை, கலைஞர்களின் எதார்த்தமான நடிப்பு, அழகான காட்சியமைப்புகள் மற்றும் மனதைக் கவரும் வசனங்கள் யாவும் இந்நாடங்கங்களில் இடம்பெற்றுள்ளன. மலேசிய உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கம் கொடுத்து எதிர்காலத்தில் சிறப்பான படைப்பை வழங்க ஆஸ்ட்ரோ வானவில் இந்த வாய்ப்பினை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த உள்ளூர் நாகடங்களைக் காண உங்களுக்கு ஆர்வமா? செப்டம்பர் 17 முதல் ஒவ்வொரு திங்கள் தொடங்கி வெள்ளி வரை இரவு 9.00 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில்லுடன் இணைந்திருங்கள்.

[nggallery id=186]

Filed in: Featured

No comments yet.

Leave a Reply